கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்களுக்கு கொரோனா!

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்களுக்கு கொரோனா!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தில் பணிபுரியும் 11 பாதுகாப்புப் பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து லிமிடெட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் ஜா-எல பகுதியில் வசிப்பவர்கள் ஆவர்.

இந் நிலையில் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் தங்களது வீடுகளை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு படையினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த விமான நிலைய அதிகாரிகளின் மற்றொரு குழு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post