திருமண வைபவத்தில் கொரோனா தொற்று - அப்படியே நுவரெலியாவும் சென்ற தம்பதிகள்!

திருமண வைபவத்தில் கொரோனா தொற்று - அப்படியே நுவரெலியாவும் சென்ற தம்பதிகள்!

ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரண்டு திருமண நிகழ்வுகளின் திருமண தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்த விஜேசூரிய தெரிவிக்கின்றார்.

இதனிடையே, பாதுக்க – வடரெக்க பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வின் வரவேற்பு நிகழ்வு மூன்று தினங்களில், மூன்று இடங்களில் நடைபெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் இரு இடங்களில் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், வீட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


$ads={2}

இந்த திருமண தம்பதியினர், நுவரெலியா பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அவர்களுக்கு தென்பட்ட நோய் அறிகுறிகளை அடுத்து, பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.

இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொண்ட சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஹோமாகம – பிட்டிபன பகுதியிலுள்ள திருமண மண்டபமொன்றில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த திருமண தம்பதியினருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட 25 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post