சிறையில் இருந்து ரஞ்ஜனை விடுவிக்க போராடும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்!

சிறையில் இருந்து ரஞ்ஜனை விடுவிக்க போராடும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்!


ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ரஞ்ஜன் ராமநாயக்கவின் விடுதலைக்கான முயற்சிகளை அந்தக் கட்சியிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பக்கமாக தாவிய டயானா கமனே மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகிய ஊவதென்னே சுமன தேரரின் விடுதலைக்காக டயானா முயற்சிகளை மேற்கொண்ருடிருந்தார்.

இதனை ஊவதென்னே சுமன தேரர் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் டயானா கமகே ஆகியோரிடையே மிகவும் நெருக்கமான நட்புறவு காணப்படுவதாக மேலும் தெரிய வருகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post