கல்முனை மாநகர சபையின் அமர்வில் கைகலப்பு அமளி துமளி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்முனை மாநகர சபையின் அமர்வில் கைகலப்பு அமளி துமளி!


கல்முனை மாநகர சபையின் அமர்வின்போது உறுப்பினர்களிடையே கைகலப்பு அமளி துமளி ஏற்பட்டதால் மாநகர முதல்வர் சபை அமர்வை இடைநிறுத்திவிட்டு சபா மண்டபத்தை விட்டு வெளியேறினார். 


கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (27.01.2021)  மாலை  03.00 மணியளவில்  மாநகர சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம். றக்கீப் தலைமையில் இடம் பெற்றது.


இங்கு அமர்வின்போது புதிய 2021 ஆம் ஆண்டுக்கான நிலையியற் குழுக்களை நியமிப்பதில் முதல்வர் மற்றும் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஆரம்பித்த வாய்த்தர்க்கம்  எதிர்க்கட்சி  ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கைகலப்பாக மாறக்கூடிய நிலை உருவானது.


கல்முனை மாநகர சபை உறுப்பினர் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் கதிரமலை செல்வராசா தனக்கு விரல் நீட்டி பேசினார் என் பதால் அவரை  சபை அமர்விலிருந்து வெளியேற்றுவதோடு தற்காலிகமாக சபை அமர்விலிருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்தார்.

இதன் போது  எதிர்க்கட்சியை மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்களும் கைகலப்பும் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து மாநகர சபை உறுப்பினர்  கதிரமலை செல்வராசாவை வெளியேற்ற முற்பட்டவேளையிலேயே அங்கு கூச்சல் குழப்பம்  பதற்றம் ஏற்பட்டது.


இந்நிலையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான  மாநகர சபையின்  உறுப்பினர்களான ராஜன்  தோடம்பழ உறுப்பினர் எம்.அசீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் மனாப் ஆகியோர் உட்பட குறித்த பிரச்சினையுடன் தொடர்புடைய  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் கதிரமலை செல்வராசா ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.