
அவிசாவளை - ஹன்வெல்லவின் தும்மோதர என்ற இடத்தில் 65 வயது பௌத்த துறவி ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் சந்தேககத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 ஜனவரி 03ஆம் திகதி அன்று, ஹன்வெல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி ஜனவரி 02ஆம் திகதியன்று உடுவில தர்மசிறி தேரர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
$ads={2}
இந்நிலையில், குறித்த பௌத்த துறவியின் எரிந்த உடல் கொடதெனியாவ பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேககத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இந்தக் குற்றத்துக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
விசாரணையின் போது கொல்லப்பட்ட துறவிக்கும் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கும் இடையே சண்டை நிகழ்ந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர்கள் குறித்த பௌத்த துறவியுடன் தங்கியிருந்த இளம் துறவி ஒருவரின் பெற்றோர் என்பது தெரியவந்துள்ளது.