கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


$ads={2}


இதன்படி மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கடந்த 03ஆம் திகதி மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.


அத்துடன், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கடந்த 02ஆம் திகதி களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.


இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post