பலூன்களுக்கு கொரொனா பரிசோதனை? இலங்கையில் சம்பவம்!

பலூன்களுக்கு கொரொனா பரிசோதனை? இலங்கையில் சம்பவம்!

திருகோணமலை - கண்டி வீதியில் அமைந்துள்ள ஆண்டாங்குள பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் விட்டுச் செல்லப்பட்ட பலூன்களால் அப்பிரதேசத்தில் பதற்றநிலையொன்று ஏற்பட்டது.

கருப்பு நிற பலூன்கள் சில அப்பிரதேசத்தில் காணப்பட்டதை அடுத்து அவ்பலூன்களை குறித்த பிரதேச சிறுவர்கள் விளையாடிய நிலையில் பலூன்களுக்குள் கொரோனா வைரஸ் நிரப்பப்பட்டு ஆண்டாங்குள பிரதேசத்திற்கு கொண்டுவந்து போடப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து குறித்த தகவல் அப்பிரதேச வாசிகளால் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் இரண்டு பலூன்களை எடுத்து வந்து அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இரண்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இரண்டும் நெகட்டிவ் முடிவு வந்தது.

இதை அடுத்து கருத்து தெரிவித்த உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி இது வதந்தி என்றும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post