சடலங்களை அடக்கம் செய்யுமாறு அடிப்படைவாத குழுக்கள் மட்டுமே கோரிக்கை வைக்கிறது! -விமல் வீரவன்ச

சடலங்களை அடக்கம் செய்யுமாறு அடிப்படைவாத குழுக்கள் மட்டுமே கோரிக்கை வைக்கிறது! -விமல் வீரவன்ச


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய, முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களே கோரிக்கை விடுப்பதாக தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 


$ads={2}


இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,


“சிங்கள பௌத்தர்கள் அனைத்து மரணச் சடங்குகளிலும் தமது மதக் கலாசாரங்களை பின்பற்றுவார்கள். உயிரிழந்த நபரின் சடலத்தை சில நாட்கள் வைத்திருப்பார்கள்.


அதன் பின்னர், மகா சங்கத்தினரை வரவழைத்து அனைத்து அனுஷ்டானங்களையும் நிறைவு செய்து, உயிரிழந்தவரின் மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர் இறுதிக் கிரியைகளை மேற்கொள்வார்.


அத்துடன் கத்தோலிக்க மக்களும் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை பெரும்பாலும் அடக்கம் செய்வார்கள். அதேபோன்று ஹிந்து மக்களும் பெரும்பாலும் அடக்கம் செய்வார்கள்.


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களை மாத்திரமே தகனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கமும் செய்யலாம், தகனமும் செய்யலாம். அதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. 


ஆனால் முழு உலகமே தற்போது முடங்கியுள்ள நிலையில், அதிலிருந்து மீளுவதற்கு வழிகளை தேடுவதை விடுத்து இன்று சில முஸ்லிம் அடிப்படைவாதைக் குழுக்கள், அல்லது அவ்வாறான குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய நபர்கள், சடலங்களை தகனம் செய்ய வேண்டாம், அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குங்கள் என கோருகின்றார்கள்” என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post