
நாடாளுமன்ற பணியாளர்களில் மேலும் ஐவருக்கும், பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையின் அடிப்படையிலேயே அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
அத்துடன், நாடாளுமன்ற வளாகத்துடன் தொடர்புடைய 943 பேருக்கு இதன்போது PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த PCR பரிசோதனைகளில் பங்குபற்றிய 32 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
அத்துடன், நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய பணியாளர்கள் 911 பேருக்கு இதுவரை PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 980 பேர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படும் எனவும், நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
நீர் வழங்கல் அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மகேந்த ஹரிஸ்சந்திர இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அண்மையில கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவரின் செயலாளர் உள்ளிட்ட 15 பேருக்கு இவ்வாறு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.