தந்தை ஒரு சிறுநீரக நோயாளி; லெப்டொப் இல்லாத காரணித்தாலேயே இலட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன்! -சுக்ரா முனவ்வர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தந்தை ஒரு சிறுநீரக நோயாளி; லெப்டொப் இல்லாத காரணித்தாலேயே இலட்சாதிபதி நிகழ்ச்சிக்கு வந்தேன்! -சுக்ரா முனவ்வர்


மஹாராஜா குழுமத்தின் சிரச எனும் சகோதர மொழி தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிகழ்ச்சில் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


$ads={2}


தற்காலத்தில் ஒன்லைன் மூலமான வகுப்புகள் நடைபெற்று வருவதினால் தான் உயர் தரத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவி என்ற வகையில் ஒன்லைன் பாடங்களில் கலந்து கொள்வதற்கான ஒரு மடிக்கணிணி - லெப்டப் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு தனது  தந்தைக்கு வசதி இல்லாமையினால் தான் தான் இந்த இலட்சாதிபதி நிகழ்வில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.


என்னைப் போல் பல மாணவிகள் தமது கல்வி நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஒன்லைன் வகுப்புகளுக்காக இன்டெர்னெட் மையங்களுக்கு சென்று படிக்கும் பலர் உள்ளனர். 


நான் படித்து பட்டம் பெற்று உலக புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தின் பெண் இயக்குணரான பணியில் அமர்ந்து அந்த நிறுவனத்தை வழி நடத்த வேண்டும் என்பதே எனது ஆசை.


எனது பெற்றோர் முஸ்லிம்களாக இருப்பினும் எனக்கு எனது காரியங்களை செய்வதற்கு பூரண இடம் வழங்கியிருக்கிறார்கள். பெற்றோர் வழங்கும் சுதந்திரத்தை சரியாக வெற்றிக்காக வேண்டி நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.