பிரித்தானியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது!

பிரித்தானியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது!

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியதையடுத்தே, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும் பிரத்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் தொடர்பில் தாம் மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பிரத்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரை 1 இலட்சத்து 162 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 36 இலட்சத்து 89 ஆயிரத்து  746 தொற்றாளர்கள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post