
இலங்கை முஸ்லிம்களின் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் (MMDA) திருத்தங்கள் மேட்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உத்தேச திருத்தங்கள் மூலம் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18 ஆக உயர்த்தப்படும் என்றார்.
$ads={2}
தற்போது திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
"இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய மாற்றம் ஒன்று, நாங்கள் இதைச் செய்கிறோம்," என்று அவர் கூறினார்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தினை திருத்துவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக தோல்வி அடைந்தே உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டிலும் முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டது.
திருத்தங்கள் குறித்து அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டதாக அமைச்சர் பைசர் முஸ்தபா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.
மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும் என்று 2019 இல் முன்மொழியப்பட்டது. மணமகள் தனது ஒப்புதலின் அடையாளமாக திருமண பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் ஒரு காதிக்கு குறைந்தபட்ச தகுதியாக வழக்கறிஞராக மேம்படுத்தவும் முன்மொழியப்பட்டது.
மேலும் பெண் காதிகளுக்கு அனுமதி வழங்க ஒப்பந்தமும் எட்டப்பட்டது.