
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திவந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (11) காலை முதல் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில் மாணவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற துணைவேந்தர், இடிக்கப்பட்ட அதே இடத்தில் இன்று காலை 7.00 மணிக்கு அடிக்கல் நாட்டுவதாக உறுதியளித்தார்.
இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடித்து அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிட்டு 3 நாட்களாக போராட்டம் செய்து வந்த மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய வாக்குறுதியை அடுத்தே போராட்டம் நிறைவுக்கு வந்தது.