ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்!

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்!

ரஞ்சன் ராமநாயக்க தண்டனையை நிறைவு செய்யும் நாள் முதல் 7 வருடங்களுக்கு அவருடைய பிரஜாவுரிமை இரத்து செய்யப்படவிருப்பதாக பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த காலப் பகுதியில் அவருக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}

எனினும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே, அவருக்கு மீண்டும் அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 4 வருட சிறைத் தண்டனை மற்றும் 7 வருட பிரஜாவுரிமை இரத்து ஆகிய காலப் பகுதிகள் நிறைவடைந்ததன் பின்னரே அவருக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு அமைய சுமார் 11 வருடங்கள் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post