ஹட்டனின் பாடசாலை மாணவருக்கு கொரோனா தொற்று - மாணவர்கள் சுகாதார வழிமுறைகளை பேணுவதில்லை என பொது சுகாதார ஆய்வாளர் தெரிவிப்பு!

ஹட்டனின் பாடசாலை மாணவருக்கு கொரோனா தொற்று - மாணவர்கள் சுகாதார வழிமுறைகளை பேணுவதில்லை என பொது சுகாதார ஆய்வாளர் தெரிவிப்பு!

ஹட்டன் கல்வி அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் ஹட்டன் போஸ்கோ கல்லூரியின் 14 வயது மாணவர் மற்றும் அவரது தாயார் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்ற பொது சுகாதார ஆய்வாளர் ஆர்.ஆர்.எஸ் மெதவல தெரிவித்தார்.

கல்லூரி நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கீழே விழுந்த காரணத்தினால் மாணவர் சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் மாணவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது உறுதிப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.


$ads={2}


பாதிக்கப்பட்ட மாணவரின் வகுப்பறையில் இருக்கும் 37 மாணவர்கள், 14 ஆசிரியர்கள் மற்றும் 06 பணியாளர்கள், மாணவரின் தாய் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் மாணவர் இருந்த வகுப்பறையும் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

ஹட்டன் பகுதியில் உள்ள மற்றொரு பெரிய தமிழ் பாடசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் மாணவரின் நெருங்கிய தொடர்பாளர் என தெரியவந்துள்ளது என்று ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்

கடந்த 23 ஆம் தேதி ஹட்டன் கல்வி அலுவலகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டதோடு ஹட்டன் பகுதியில் மாணவர்கள் பாடசாலை சென்று வீடு திரும்பிம் போது சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

தொற்றுக்கு இலக்கான மாணவருடன் மருத்துவமனையில் இருந்த மாணவரின் தாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது 23 ஆம் திகதி இனங்காணப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post