வேட்டைக்கு பொருத்தப்பட்ட சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இருவர் பலி! மன்னாரில் சம்பவம்!

வேட்டைக்கு பொருத்தப்பட்ட சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இருவர் பலி! மன்னாரில் சம்பவம்!

மன்னார் - யாழ் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இருவரின் சடலங்களை இன்று (29) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் - யாழ் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பைப் பெற்று வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அமைத்த மின் இணைப்பில் சிக்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

இன்று காலை குறித்த இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த பிரதேசவாசிகள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

பின்னர் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். சடலம் மீட்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.