இலங்கை அணியின் தேசிய வீரர்களின் ஊதியத்தை குறைக்க தீர்மானம்!

இலங்கை அணியின் தேசிய வீரர்களின் ஊதியத்தை குறைக்க தீர்மானம்!


இலங்கை அணியின் தேசிய வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.

தற்போது இலங்கை தேசிய அணி வீரர்களின் ஊதியத்தை குறைத்து திறமை அடிப்படையில் ஊதியத்தை வழங்குவதற்கான சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது முதலாந்தர ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டொலர் ஊதியத்தை வருடாந்தம் பெறுவதுடன், 02 ஆம் மற்றும் 03ஆம் தர ஒப்பந்த வீரர்கள் 80 ஆயிரம் அமெரிக்க டொலர் மற்றும் 60 ஆயிரம் அமெரிக்க டொலர் ஊதியத்தை முறையே பெறுகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் தோல்வியடைந்து 04 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது,

அத்துடன் 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணி 31 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 10 போட்டிகளை மாத்திரமே வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.