இலங்கை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் ஒளிபரப்பப்படும் சேனல் மற்றும் வர்ணனையாளர்கள் விபரம் வெளியானது!

இலங்கை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் ஒளிபரப்பப்படும் சேனல் மற்றும் வர்ணனையாளர்கள் விபரம் வெளியானது!

இந்த வாரம் ஆர்மபமாகவிருக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஐந்து வர்ணனையாளர்களில் ரஸ்ஸல் ஆர்னோல்ட் மற்றும் ரொஷான் அபேசிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.


$ads={2}

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான மார்க் புட்சர், ஓவைஸ் ஷா மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் ஆகியோருடன் ரஸ்ஸல் அர்னோல்ட் மற்றும் ரொஷான் அபேசிங்க ஆகியோர் வர்ணனையாளர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) ஒரு பகுதியாக அமையவிருக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டி டெஸ்ட் தொடர்கள் ஜனவரி 14 முதல் 26 வரை பார்வையாளர்கள் இன்றி இடம்பெறவுள்ளது

இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் “சோனி கிரிக்கெட்” சேனலில் ஒளிபரப்பப்படும். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post