பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கொரோனா தொற்றாளருக்கு வழங்கப்பட்ட கேக் துண்டினை உண்ட பலர் - காலியில் சம்பவம்

பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கொரோனா தொற்றாளருக்கு வழங்கப்பட்ட கேக் துண்டினை உண்ட பலர் - காலியில் சம்பவம்

கொரோனா தொற்றுக்கு இலக்கான காலி சிறைச்சாலையில் சிறைக் காவலர் ஒருவர், தனது வீட்டில் பிறந்தநாள் விழாவை நடத்தியதாகவும், அண்டை வீட்டில் இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டதாகவும் காலி மாவட்ட பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.

$ads={2}

குறித்த நபர் மகனின் பிறந்த நாளைக் கொண்டாடவே இந்த பிறந்தநாள் விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். மேலும் மகன் கொரோனா தொற்றுக்கு இலக்கான தந்தைக்கு கேக் ஊட்டியதாகவும், அதே கேக் துண்டினை மேலும் 16 பேருக்கு வழங்கப்பட்டதாகவும் பிரதேச சுகாதார அதிகாரி தெரிவித்தார். 

 பக்கத்து வீட்டில் நடைபெற்ற விழாவில் 41 முதியோர்கள் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேலும், ஜனவாரி 01 முதலாம் திகதி விஹாரையிலுள்ள தேரர்களுக்கும் குறித்த தொற்றாளர் தானம் வழங்கியுள்ளார். 

மேலும் 41 முதியோர்கள், தேரர்கள் அவருடன் நெருங்கிப்பழகிய அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post