கொரோனா தொற்று; வாய் திறந்தார் வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய!!

கொரோனா தொற்று; வாய் திறந்தார் வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய!!


தற்போது நான் எனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளேன் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார். 


அவரின் வீட்டில் கடந்த தினம் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாதெனிய தொற்றாளருடன் நெருங்கிப்பழகியவராக அடையாளம் காணப்பட்டார். 


$ads={2}


அதன்படி, அவரை தனிமைப்படுத்துவதற்காக அவரின் வீட்டிற்கு பொது சுகாதார பரிசோதகர் சென்ற போதும் வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.


அரச வைத்திய அதிகாரி சங்கத்தின் தலைவர் விசேட நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


குறித்த விருந்துபசாரத்தின் போது 03 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த வைத்தியரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 


குறித்த வைத்தியர் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


அதன்படி, வைத்தியர் அனுருத்த பாதெனியவை தனிமைப்படுத்துவதற்காக நேற்றிரவு (13) அவரின் வீட்டுக்கு சுகாதார பிரிவினர் சென்றுள்ளனர். 


இதன்போது, அவர் தெரணியகல பிரதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக களனி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சந்திமா விக்ரமகே தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post