அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவரப்படுவதினால் எதிர்வரும் காலங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விடயத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.

எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவதனை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் இலகுபடுத்தபபடமாட்டாது.

நாட்டு மக்களில் சுமார் 70 சத வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கினால் மாத்திரமே கொரோனா தொற்ற ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.

எனவே அவ்வாறானதொரு இலக்கை அடைவதற்கு பாரிய கால அவகாசம் தேவைப்படும். எனவே பொதுமக்கள் சுகாதார விதமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post