தினமும் வீட்டுக்கு வரும் 5 ஆயிரம் கிளிகள்! வருமானத்தில் 50 சதவிகிதம் கிளிகளுக்கு செலவிடும் தம்பதியினர்!

தினமும் வீட்டுக்கு வரும் 5 ஆயிரம் கிளிகள்! வருமானத்தில் 50 சதவிகிதம் கிளிகளுக்கு செலவிடும் தம்பதியினர்!


தமிழ் நாட்டில் இப்போதெல்லாம் கிராமப் பகுதியிலேயே பறவைகள், கிளிகளைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. ஆனால் இப்படியான சூழலில் வாகன நெரிசல் மிகுந்த சென்னையில் ஒருவீட்டுக்கு தினமும் 5 ஆயிரம் கிளிகள் வருகிறது என்றால் ஆச்சரியம் ஆனதுதானே?


வளர்ச்சி என்னும் பெயரில் வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள், எங்கு திரும்பினாலும் உயர்ந்து நிற்கும் காங்கிரீட் கட்டிடங்கள் ஆகியவற்றால் இப்போது புறநகர்ப்பகுதிகளிலேயே பறவைகளைக் காணமுடியவில்லை. இப்படியான சூழலில் சென்னை சிட்டிக்குள் இருக்கிறது சிந்தாகிரிப்பேட்டை எனும் பகுதி. இங்குள்ள சுதர்சன் சாஹ்_வித்யா தம்பதியினரின் வீட்டுக்கு தினமும் 5 ஆயிரம் கிளிகள் வரை உணவு சாப்பிட வருகின்றன. அதிலும் மாலை 4.00 மணியானால் மறக்காமல் ஆஜர் வைத்துவிடுகின்றன. அந்த தம்பதியினரும் துளியும் சலிக்காமல் அரிசி, கடலை உள்ளிட்ட உணவுகளை வைக்கின்றனர்.


சுதர்சன் சாஹ் எலக்ட்ரிகல் கடை வைத்திருக்கிறார். தன் மாதாந்திர வருமானத்தில் 50 சதவிகிதத்தை கிளிகள், சாலையில் திரியும் பிராணிகளுக்கு உணவிட இவர் செலவு செய்கிறார். மரங்களை வீட்டுக்கு ஒன்று என்ற அளவிலேனும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் கிளிகளுக்கு வசிக்கவேனும் இடம் கிடைக்கும். நாம் நம் வீட்டு மொட்டைமாடியில் தினமும் கொஞ்சம் அரிசியை போட்டாலே பறவைகள் வரத் துவங்கிவிடும். இது நாம் வாயில்லாப் பிராணிகளுக்குச் செய்யும் பெரிய சேவை.’’ என மனம் நெகிழ்வுடன் சொல்கிறார்கள் சுதர்சன்_வித்யா தம்பதியினர்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post