நாளை முதல் இலங்கையில் கொரோனா தடுப்பூசி - ஐந்து முக்கிய அம்சங்கள்

நாளை முதல் இலங்கையில் கொரோனா தடுப்பூசி - ஐந்து முக்கிய அம்சங்கள்

ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஜெனெகா கோவிட் -19 500,000 தடுப்பூசியினை இலங்கை நாளை இலங்கை வரவுள்ளது.

இத்தடுப்பூசிகள் இலங்கைக்கு பெறப்படும் COVID-19 தடுப்பூசிகளின் முதல் தொகுப்பாகும் என ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்

நாளை காலை 11.00 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் தடுப்பூசிகள் வரும் என்று இன்று சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்

ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி தொகுதி இலங்கைக்கு இந்தியா அளித்த நன்கொடை ஆகும்.

இலங்கையில் தடுப்பூசி பெறும் முதல் குழுவாக 250,000 முன்னணி வரிசை தொழிலாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.


$ads={2}

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) தொடங்கும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தடுப்பூசிகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்ட ஐந்து முக்கிய கருத்துகக பின்வருமாறு:


  1. இரண்டு முதல் மூன்று மில்லியன் ஒக்ஸ்போட்-அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகள் உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் அடுத்த இரண்டு நாட்களில் இலங்கை கொள்வனவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  2. வரும் 6 முதல் 9 மாதங்களில் அனைத்து தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை அரசாங்கம் இலவசமாக வழங்கும்.
  3. சில தனியார் துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடவும், அதற்கான நிதிச் செலவைத் தாங்கவும் அரசாங்கத்திற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளன.
  4. சீன உற்பத்தி செய்யும் சினோபார்ம் எனும் 300,000 கோவிட் -19 தடுப்பூசியினை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது
  5. இலங்கையில் தடுப்பூசிகள் கிடைத்தவுடன் COVID-19 தடுப்பூசிகள் இடுவது கட்டாயமாக்கப்படாது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post