கொரோனா தடுப்பூசி வழங்கும் தினம் குறித்து அரசு அறிவித்தது !

கொரோனா தடுப்பூசி வழங்கும் தினம் குறித்து அரசு அறிவித்தது !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் முதல் இலங்கையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.


$ads={2}

தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கான முன்பதிவுகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post