மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதமாக்கிய நபர் கைது!

மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதமாக்கிய நபர் கைது!


மாவனெல்லை ஹிங்குல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேக நபர் மாவனெல்லை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கேகாலை சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகரின் அறுவுறுத்தலின் பேரில் மாவனெல்லை பொலிஸார் மற்றும் குற்றவியல் துப்பறியும் பணியகம் ஆகியன விசாரணைகளை மேற்கொண்டன.


$ads={2}


கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது சந்தேக நபர் இதன்போது அடையாளம் காணப்பட்டார். இன்று மாவனெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மாவனெல்லை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.


இச்சம்பவம் பயங்கரவாதச் செயலின் ஒரு பகுதி எனக் கூறப்பட்டபோதிலும் பயங்கரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post