மேல் மாகாண பாடசாலைகளின் மாணவ ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் பரிந்துரை!

மேல் மாகாண பாடசாலைகளின் மாணவ ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் பரிந்துரை!


மேல் மாகாண பாடசாலைகளுக்கு செல்லவேண்டியுள்ள வெளிமாகாணத்தின் மாணவர்கள் ஆசிரியர்கள் தமக்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு செல்லுமாறு கல்வி அமைச்சு பரிந்துரைத்துள்ளது. 


மேல் மாகாணப் பாடசாலைகளில் தரம் 11க்கான வகுப்புகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுத்துள்ளது. 


வெளி மாகாணங்களில் இருந்து மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு வந்து செல்வதற்கான சுகாதார அனுமதி இன்னமும் வழங்கப்படாமையினால், வெளிமாகாண ஆசிரியர்களோ, மாணவர்களோ மேல் மாகாணத்திற்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 


எனவே, மேல் மாகாணத்திற்கு வெளியே தமக்கு அருகில் உள்ள பாடசாலைக்கோ, அல்லது மேல் மாகாணத்திற்குள் வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியர்கள் தமக்கு அருகில் உள்ள பாடசாலைக்கோ செல்ல முடியும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 


இது தற்போது வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தரம் 11 ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post