தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய தாய்வான் நாட்டு பிரஜைக்கு 7 மில்லியன் ரூபா அபராதம்!

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய தாய்வான் நாட்டு பிரஜைக்கு 7 மில்லியன் ரூபா அபராதம்!


தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் (சுமார் 7 மில்லியன் ரூபா) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் தனது அடுக்குமாடி கட்டிடத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார்.


இந்த தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர் சுமார் ஏழு முறை, கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


தனிமைப்படுத்தலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறுகையில் அயலவர்களில் ஒருவருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையானது தாய்வானில் அபராதமாக பிறப்பிக்கப்பட்ட அதிகளவிலான அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


23 மில்லியன் மக்கள் வாழும் தாய்வான் நாட்டில் 890 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 07 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post