வாலிபர்களோ, யுவதிகளோ தன்மானத்துடன் இருப்பது தவறா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாலிபர்களோ, யுவதிகளோ தன்மானத்துடன் இருப்பது தவறா?


வாசிக்க முன், நேரான பார்வையில் பார்த்தே தொடங்குங்கள்..


வாலிபம் என்று சொல்லக்கூடிய பருவம் பலரும் பல வயதுகளை குறிப்பிட்டுள்ளனர்..


அனைவரும் ஒருமித்து கூறிய ஒரு வயது என்றால், 15 வயதிலிருந்து ஆரம்பமாகின்றது என்று..


எது எப்படியாயினும், ஒரு புத்தம் புதிய உணர்வுகளை கொண்ட அபூர்வ பருவம் அது. ஒருவரின் செயற்பாடுகள், உடல், நடை, பாவனை என்பவற்றை வைத்து மதிப்பிலாம், இவர் வாலிப வயதை எட்டியுள்ளார் என்று..


இன்று சில பெற்றோர்கள் எல்லா பிள்ளைகளையும் ஒரு ஸ்தானத்தில் வைத்தே பார்க்கின்றனர். இது தவறு..


அவரவருக்குரிய மரியாதையை அதற்கேற்றாற் போல் கொடுக்க வேண்டும்..


இந்த வயதில் பலதை தன் பெற்றோரிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர்..

அதில், அன்பு, மரியாதை, சுய கௌரவம், சுய அழகு, சாதிக்கும் பண்பு என்பன குறிப்பிடத்தக்கன..


அவர்களது உணர்வுகளையும், உரிமைகளையும் மதியுங்கள்..


யார் எப்போது உயர்வார்? என்பது தெரியாது. அதனால், யாரையும் அளவுக்கதிகமாக திட்டாதீர்கள், இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு சோர்வு உண்டாகிறது..


குறிப்பாக வாலிப, யுவதிகளுடன்  நடந்து கொள்ளும் போது மென்மையை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் கடுமையாக, கேலி செய்து நடப்பீர்களாயின், அவர்கள் எடுக்கும் முடிவு எப்படியானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது..


உதாரணமாக ஒன்றை பார்ப்போம். அன்பில் குறைபாடு செய்தால்,


அவர்கள் வேறு திசையில் அன்பை தேடுவதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணம் என்பேன்..


அவர்கள் முறையான அன்பை கொடுக்காததால், வேறு வழியில் இளம் வாலிபர்களும், யுவதிகளும் தேடுகின்றனர்..


அந்த அன்பும் முறையாக அமையுமானால், தப்பித்து விடலாம்..


இல்லையெனில், பாதாளக்குழி தான்..

மீண்டு வருவது சாத்தியமற்றது..!


ஆகையால், அனைத்திலும் நடுத்தரத்தையும், நூதனத்தையும் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.


எத்தனையோ செய்திகள் கேள்விப்பட்டிருப்போம், வாலிப யுவதிகளின் கவலையான செய்திகள் பற்றி..


இது தொடர்ந்தும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், அனைத்து பெற்றோர்களும் 'குழந்தை வளர்ப்பை' பற்றி கட்டாயம் நேரம் ஒதுக்கி படித்து, புது வாழ்வை துவங்குங்கள்..


ஆரம்பத்தில் கடினமாக நடந்து விட்டு, பிறகு மென்மையாக நடந்தால் வாலிப வயது அதனை ஏற்றுக் கொள்ளாது.


அதனால், அழகிய முறையில் அணுகி, அவர்களது உள்ளங்களுடன் பேசுங்கள்..


எந்தளவுக்கு என்றால், அவர்களுக்கு காதல் வந்தாலும் உங்களிடம் வந்து சொல்லும் அளவிற்கு..


சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.


தொடரும்...


✍மூலம்: றஜா முஹம்மத்,

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர், உளவியல் மாணவன்

பேனா துளிகள் & UYC Team.

நிறுவனர், குழும நிர்வாக ஆசிரியர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.