அழுத்கம பகுதியில் திருமண நிகழ்வொன்றில் 12 பேருக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அழுத்கம பகுதியில் திருமண நிகழ்வொன்றில் 12 பேருக்கு தொற்று உறுதி!


அழுத்கம - களுவாமோதர பிரதேசத்தில் உள்ள திருமண நிகழ்வு மண்டபம் ஒன்றின் 35 ஊழியர்களுக்கு மேற்கொண்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த மண்டபத்தில் நேற்றைய தினம் 150 பேர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகில் நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தொற்றுக்குள்ளானவர்களில் சமையல் கலைஞர் உட்பட 12 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானமை உறுதியாகி உள்ளது. ஏனைய ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.