மூன்று நாட்களில் குணமடையாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்! புதிதாக தோன்றியுள்ள சுதேச மருத்துவர் சபதம்!

மூன்று நாட்களில் குணமடையாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்! புதிதாக தோன்றியுள்ள சுதேச மருத்துவர் சபதம்!

கொரோனா வைரஸை முற்றிலுமாக அடக்கும் ஒரு உள்ளூர் மருந்தை உருவாக்கியுள்ளதாக சுதேச மருத்துவர் ஒருவரான கலுதரேஜ் சம்பத் பெர்னாண்டோ என்பவர் தெரிவித்துள்ளார்.

பண்டைய மருத்துவ பரிந்துரைகளின்படி தயாரிக்கப்படும் சுமார் இருபத்து நான்கு வகையான மருந்துகள் இங்கு உள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த மருந்தை மக்கள் ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட ஒருவர் இதைக் அருந்தினால், அவர் 3 நாட்களில் முழுமையாக குணமடைவார் என்றும், பாதிக்கப்படாத ஒருவர் இதைக் அருந்தினால் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என்றும் அவர் கூறுகிறார்.

பண்டாரநாயக்க ஆராய்ச்சி நிறுவனம் இதை ஆய்வு செய்து அதற்கான சான்றிதழை வெளியிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 150 பாதிக்கப்பட்டவர்கள் குணமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபர் மருந்து உட்கொண்ட மூன்று நாட்களுக்குள் குணமடையவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post