
அதன்படி, வகுப்பறை ஒன்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையினை விட மாணவர்களின் தொகை அதிகரிக்குமாயின் தரமான கல்வியை வழங்குவதில் சிக்கல் ஏற்படுமென அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்
இதற்கமைய, தரம் ஒன்று வகுப்பறை ஒன்றில் அதிகபட்சமாக 40 மாணவர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய வகுப்பறைகளில் அதிக பட்சமாக 45 மாணவர்களை மாத்திரம் உள்ளீர்க்க வேண்டுமென கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.