
சிரியாவில் இஸ்ரேலியப் படைகள் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரிய அரச படையினர் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர் என யுத்த கண்காணிப்பாளர்கள் இன்று (13) தெரிவித்துள்ளனர்.
சிரியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஈராக்கிய எல்லைக்கு அருகிலுள்ள, டேய்ர் எஸோர் நகருக்கு அருகில் 18 இற்கும் அதிகமான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது.
$ads={2}
இத்தாக்குதல்களில் சிரிய அரச படையினர் 09 பேரும் சிரிய இராணுவத்துக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 31 பேரும் உயிரிழந்துள்ளனர் என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குல்களில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிரியாவில் இஸ்ரேல் நடத்திய மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
உயிரிழந்த ஆயுதக் குழு உறுப்பினர்கள் எந்ததெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 1.10 மணியளவில் இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தினர் என சிரியாவின் எஸ்.ஏ.என்.ஏ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை ஈராக்கிலிருந்து மேற்படி பிராந்தியத்தக்கு லெபனானின் ஹிஸ்புல்லா உட்பட ஆயுதக்குழுக்களினால் சிரியாவின் கிழக்குப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தாகவும், இன்று தாக்கப்பட்ட பிராந்தியத்தில் அவை களஞ்சியப் படுத்தப்பட்டிருந்ததாகவும் மேற்படி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
![]() |
Satellite image showing the construction of a new Iranian military base in Iraq’s Albukamal Al-Qaim region, near the Syrian border (ImageSat International via Fox News) |