
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சி.ஐ.டியின் சிறப்பு விசாரணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிஐடியின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் உத்தரவில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய, சி.ஐ.டி.யின் விசேட விசாரணைப் பிரிவு – 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்கவின் கீழ் செயற்படும் சிறப்புக் குழுவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
$ads={2}
கடந்த 5 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய அசாத் சாலி, "உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்துள்ள நிலையில் இலங்கை மட்டுமே அதனை மறுத்து வருவதாகவும், அதற்கான நட்ட ஈட்டை அரசாங்கம் செலுத்த வேண்டிவரும்" எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி ரவீந்ர மனோஜ் குமார பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்படடுக்கு அமையவே சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.