ஈராக்கில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்; 32 பேர் பலி; உரிமை கோரியது ஐ.எஸ்!

ஈராக்கில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்; 32 பேர் பலி; உரிமை கோரியது ஐ.எஸ்!

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.

சுன்னி முஸ்லிங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பு கூறியுள்ளது.

பக்தாத்தில் நடத்தப்பட்ட இந்த தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாக்தாத் நகரில் கடந்த 3 ஆண்டுகளில் இடம்பெற்ற பாரிய தாக்குதலாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்து சில மணித்தியாலங்களுக்கு பின்னரே ஐஎஸ் அமைப்பு இதற்கு உரிமை கோரியுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post