முன்னேற்ற பாதையில் சவூதி அரேபியா; முதலாவது ‘ட்ரைவ் இன் சினிமா’ திரையரங்கு திறக்கப்பட்டது!

முன்னேற்ற பாதையில் சவூதி அரேபியா; முதலாவது ‘ட்ரைவ் இன் சினிமா’ திரையரங்கு திறக்கப்பட்டது!

சவூதி அரேபியாவின் முதலாவது ‘ட்ரைவ் இன் சினிமா’ திரையரங்கு தலைநகர் றியாத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அகன்ற திரையில் திரையிடப்படும் படங்களை மக்கள் தமது வாகனங்களில் இருந்தவாறே பார்வையிட முடியும்.

கொரோனா பரவல் தடுப்புக்கான இறுக்கமான நடவடிக்கைகளுக்கு மத்தியில் மக்களுக்கு பொழுதுபோக்குக்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் றியாத் மாநகர சபையினால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரைவ் இன் திரையரங்கில் 150 வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்க முடியும்.

திரையிடப்படும் படத்தின் ஒலியமைப்பு இதற்காக வாகனங்களின் ஸ்பீக்கர் தொகுதியுடன் இணைக்கப்படும்.
மக்கள் வாகனங்களிலிருந்து இறங்காமல் இலத்திரனியல் முறையில் உணவுகளை ஓடர் செய்து பெறுவற்காக உணவு, பானங்களுக்காக வாகனங்களும் நிறுத்தப்படுவதற்கான பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திரையரங்கில் அரேபிய, ஹொலவூட் மற்றும் பொலிவூட் திரைப்படங்கள் திரையிப்படவும் எனவும் தினமும் 3 திரைப்படங்களை திரையிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பாரம்பரிய முறையிலான திரையரங்குகள் பல ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன. 35 வருடங்களின் பின்னர் 2018 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post