26 வயது குடும்பஸ்தர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை; புத்தளத்தில் சம்பவம்!

26 வயது குடும்பஸ்தர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை; புத்தளத்தில் சம்பவம்!


புத்தளம் - தில்லையடி, ரத்மல்யாய பகுதியில் ஒருவர் தனக்குத் தானே தீ வைத்து உயிரை மாய்த்துள்ளார்.


குறித்த சம்பவம் இன்று (20) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம், கற்பிட்டி மாவட்டத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஸாம் தெரிவித்தார்.


$ads={2}

புத்தளம் தம்பபன்னி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் போதைக்கு அடிமையாகி, மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு PCR பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படுமென திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.


இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post