சுமார் மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்த ஜாக் மா திடீர் தோற்றம்!

சுமார் மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்த ஜாக் மா திடீர் தோற்றம்!


காணாமல் போனதாக சந்தேகிக்கப்பட்ட சீனாவின் பிரபல தொழிலதிபரும், அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா இன்று (20) பொதுவெளியில் மீண்டும் தோன்றியுள்ளார்.


கிட்டத்தட்ட 3 மாதங்கள் எங்கிருந்தார் எனத் தெரியாமல் தலைமறைவாக இருந்த ஜாக் மா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஆசிரியர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.


$ads={2}


ஜாக் மா மறைந்துவிடவில்லை,  ஜாக் மா இன்று காலை 100 கிராம ஆசிரியர்களுடன் ஒரு காணொளி மாநாட்டை நடத்தினார் என  சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.


இணையவழி மாநாட்டின் மூலம் 100 கிராமப்புற ஆசிரியர்களை ஜாக் மா சந்தித்துள்ளார்.


ஜாக் மா பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சன்யா, ஹைனானில் கிராமப்புற ஆசிரியர்களுடன் உரையாடுகிறார், ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இந்த சந்திப்பு இந்த ஆண்டு காணொளி மாநாடு மூலம் நடந்தது.


"வழக்கமாக தெற்கு ஹைனானில் உள்ள சன்யாவில் இந்த சந்திப்பு நடைபெறும், ஆனால் இந்த ஆண்டு, கொரோனா வைரஸ்  காரணமாக இது இணையவழி காணொளி மாநாடு மூலம் இடம்பெற்றுள்ளது.


ஜாக் மா 'ஆப்ரிக்காவின் பிஸினஸ் ஹீரோஸ்' என்ற பெயரில் புதிய தொழில் முனைவோர்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஜாக் மா சேர்க்கப்பட்டிருந்தார்.


இந்நிகழ்ச்சி கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் கடைசி நேரத்தில் ஜாக் மாவிற்கு பதிலாக அலிபாபா நிறுவனத்தின் வேறொரு அதிகாரி கலந்து கொண்டார். அதன்பிறகு ஜாக் மா எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு ஒத்திவைக்கப்பட்டது.


கிட்டத்தட்ட 3 மாத இடைவெளிக்கு பிறகு பொதுவெளியில் தோன்றியதால், ஜாக் மா ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post