வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 200 இலங்கையர்கள் இன்று இலங்கை வந்தடைந்தனர்!

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 200 இலங்கையர்கள் இன்று இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 200 இலங்கையர்கள் இன்று இலங்கை வந்தடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 6 விசேட விமானங்களினூடாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாடு திரும்ப முடியாத நிலையில், பல்வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்திற்கு அமைய இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.


$ads={2}

மேலும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து 51 பேரும், ஜப்பானில் இருந்து 44 பேரும், கட்டாரில் இருந்து 31 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 538 இலங்கையர்கள் பல்வேறு தேவைகள் நிமித்தம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏழு விமானங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post