மூன்று வயது குழந்தை துஷ்பிரயோகம்; 14 வயது சிறுவன் கைது!

மூன்று வயது குழந்தை துஷ்பிரயோகம்; 14 வயது சிறுவன் கைது!


மூன்று வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் பேரில் 14 வயது சிறுவனொருவன் மினுவாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் இப்பிள்ளையின் உறவினரென்பது தற்போது தொியவந்துள்ளது.


மேற்படி சிறுவன் நேற்றைய தினம் (24) கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.


குறித்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை தொழில் நிமித்தம் வெளியில் செல்வதால் பாட்டியின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார். 


விளையாடிவிட்டு வருவதாகக் கூறி குறித்த சிறுமியை சந்தேக நபரான சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இச்சந்தர்ப்பத்திலேயே சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தொிவிக்கின்றனர்.


மேற்படி சிறுமி கம்பஹா மாவட்ட தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சிறுவன் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post