தமிழ் பேசும் உள்ளங்களுக்கு புதிய தெம்பை அளிக்கும் "நியூஸ் DAY" பத்திரிகை! YMMA தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி வாழ்த்து!

தமிழ் பேசும் உள்ளங்களுக்கு புதிய தெம்பை அளிக்கும் "நியூஸ் DAY" பத்திரிகை! YMMA தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி வாழ்த்து!

தமிழ் ஊடக உலகில் புதிய பிறப்பெடுத்துள்ள "நியூஸ் DAY" பத்திரிகை, தமிழ் பேசும் உள்ளங்களுக்கு புதிய தெம்பை அளித்திருக்கிறது.

ஊடகத்துறை, மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகியுள்ள இக்காலத்தில், "நியூஸ் DAY" பத்திரிகை, அதன் பங்களிப்பை பூரணமாக வழங்கும் என எதிர்பார்க்கின்றேன். 

இப்பத்திரிகை நமக்குத் தரும் செய்தியை, பக்கச் சார்பின்றி, நடு நிலையாக நின்று, தெளிவுடனும், சுவாரஸ்யமாகவும் வழங்கி, தனக்கென வாசகர் வட்டத்தில் ஒரு களம் பிடிக்க வேண்டும். 


அரசியல், அறிவியல், ஆத்மீகம், பொருளியல் மற்றும் சமூக வெளிகளில் நிகழும் சம்பவங்களை அறிந்து கொள்வதில் இந்தப் பத்திரிகை ஆக்கபூர்வ பணியாற்றுமென நம்புகின்றேன்.

தவறான வழி நடாத்தல்கள் மற்றும் வியாபார நோக்கிலான செயற்பாடுகளைத் தவிர்த்து, சமூக சேவை சிந்தனையில் செயற்படுவதே ஊடக தர்மத்திற்கு அழகு. எனினும், இந்நிலைமைகள் ஊடகத்துறையைப் பொறுத்த வரையில் அருகி வருவது, வாசகர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.

இதிலிருந்து இவர்களை விடுவித்து உற்சாகப் பணி புரிவது, இப்பத்திரிகையின் பணிக்கு பொறுப்பாக்கப்பட்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன். வெளியாகி (21.01.2021) 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த யதார்த்தத்தையே நான் புரிந்து கொண்டேன்.

ஒரு சமூகத்தின் பத்திரிகை அல்லாமல், ஒரு தமிழ் மூல தேசியப் பத்திரிகையாக இலங்கை முழுவதும் இப்பத்திரிகை மலர வேண்டும். ஊடகத் துறையில் அச்சு ஊடகத்தின் முக்கியத்துவமறிந்து, எங்களுக்கென ஒரு பத்திரிகை தேவை என்பதையும் கருதி இப்பத்திரிகை வெளிவர வேண்டும்.

"நியூஸ் DAY" பத்திரிகை நீடூழி காலம் வாழவேண்டும். இப்பத்திரிகைக்கு வை.எம்.எம்.ஏ. பேரவை சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

- சஹீட் எம். ரிஸ்மி -
தேசியத்தலைவர்,
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை (தலைமையகம்),
தெமட்டகொடை வீதி,
கொழும்பு - 09.

தகவல்:
ஐ. ஏ. காதிர் கான்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post