
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டார்.
தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
$ads={2}
சந்தேக நபர் பெற்றோர்களுக்கு தெரியாமல் அவர்களது 14 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுதியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோரால் மூதூர் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டு பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு பிணையாளரை மிரட்டியமை, வீட்டை உடைத்து திருடியமை மற்றும் திருட்டுப் பொருட்களை வைத்திருந்தமை போன்ற வழக்குகள் மூதூர் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.