தன்னியக்க இயந்திரம் கண்டுபிடிப்பு; தரம் 11 மாணவன் அம்ஹர்!

தன்னியக்க இயந்திரம் கண்டுபிடிப்பு; தரம் 11 மாணவன் அம்ஹர்!

மாணவர்கள் வகுப்பறைகளில் செனிட்டர் திரவியத்தால் கைகளை கழுவும் போது  அதைத் தொடமால், கழுவுவதற்கு புதிய தொழில்நுட்ப ரீதியான சிறிய ரக தன்னியக்க இயந்திரமொன்றை குருநாகல் பாடசாலை மாணவன் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். 

கொரொனா தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவர்கள் வகுப்பறைகளில் செனிட்டர் திரவியத்தால் கைகளை கழுவும் போது அதைத் தொடமால் கழுவதற்கு  தொழில்நுட்ப ரீதியான தன்னியக்க இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார் குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் எம்.ஏ.எம் அம்ஹர்.

இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப கொரோனா தொற்றுக் காரணமாக முகக்கவசம் அணிந்து ஒரு மீட்டர் சமூக இடைவெளியைக் கருத்திற் கொண்டு சுகாதார நடை முறைகளைப் பேணி வகுப்பறையில் பாடங்களை கற்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பங்களிப்பாக அமையும் என்ற நோக்கில் இந்த கருவியை உருவாக்கியதாக அவர் தெரிவித்தார்.

சிறு வயதில் இருந்து பல கண்டுபிடிப்புக்களைச் செய்து வரும் இவர் அசாதாரண நிலைமைகளை எதிர் கொண்டு பாதுகாப்பான மற்றும் கல்விச் சூழலை சுகாதார நடைமுறையுடன் வாழப் பழகுவதற்கான உகந்த சிறிய ரக தொழில்நுட்ப தன்னியக்க இயந்திரம் கண்டுபிடித்த மாணவன் அம்ஹரை பாடசாலை சமூகம் பாராட்டுகின்றது. 

அவர் இதற்காக ட்ரான்ஸ்சிஸ்டர், ஐ.ஆர். ஸ்கேனர், மோட்டர் முதலிய மின்சார இயந்திர மூலப் பொருட்கள் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். இதை மேலும் விரிவிடுத்தி தொழில்நுட்ப தேவைகளைப் பூர்த்தி செய்யவுள்ளதாக  அம்ஹர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எ.எச்.ஏ முனாவ் கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் இருந்து இப்படியான பல கண்டுபிடிப்புக்களை அவர் செய்துள்ளார். இவரது முயற்சிகளுக்கு எமது பாடசாலை சமூகம் தொடர்ந்து ஆதரவையும் பாராட்டுக்களையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார். 

இம்மாணவின் முயற்சிகளுக்கு பாட ஆசிரியை எம். ஆர். சிபானியா ராசிக் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு அளப்பரியவையாகும்

மூலம் - சோனகர்.கொம்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post