இறந்த தாயின் உடலை 10 வருடங்களாக வீட்டினுள் மறைத்துவைத்த பெண் கைது!

இறந்த தாயின் உடலை 10 வருடங்களாக வீட்டினுள் மறைத்துவைத்த பெண் கைது!


தனது தாயின் சடலத்தை 10 வருடங்களாக வீட்டில் மறைத்து வைத்திருந்த பெண்ணொருவர் ஜப்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


டோக்கியோவில் வசிக்கும் 48 வயது பெண்ணான யுமி யோஷினோ எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


டோக்கியோ மாநகர சபை வீடொன்றில் யோஷினோ வசித்து வந்தார். அவ்வீட்டிலிருந்த ப்றீசர் குளிர்சாதனப் பெட்டியில் சடலமொன்று கிடப்பதை சுத்திகரிப்பு ஊழியர் கடந்த புதன்கிழமை கண்டதையடுத்து இவ்விடயம் அம்பலமாகியது.


டோக்கியோவுக்கு அருகிலுள்ள சிபா நகரில் ஹோட்டலொன்iறில் வைத்து யோஷினோவை பொலிஸார் கைது செய்தனர்.


தனது தாய் 10 வருடங்களுக்கு முன்னர் இறந்ததாகவும், அவரின் சடலத்தை தான் ப்றீசருக்குள் மறைத்து வைத்ததாகவம் யோஷினோ கூறினார் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


தனது தாய் இறந்தமை தெரியவந்தால், அவ்வீட்டிலிருந்து தான் வெளியேற்றப்படக்கூடும் என்ற அச்சத்தாலேயே தான் இவ்வாறு செய்ததாகவும அப்பெண் கூறியுள்ளார்.


மேற்படி வீட்டின் குத்தகை ஒப்பந்தத்தில் யோஷினோவின் தாயாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.


யோஷினோவின் தாய் இருக்கும்போது 60 வயதானவராக இருந்திருக்கிலாம் எனக் கருதப்படுகிறது. அவரின் உடலில் வெளித்தெரியும் காயம் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.