இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவருக்கு 100 மில்லியன் டொலர் பரிசு! உலகின் முதன்மை பணக்காரரின் அசத்தலான அறிவிப்பு!

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவருக்கு 100 மில்லியன் டொலர் பரிசு! உலகின் முதன்மை பணக்காரரின் அசத்தலான அறிவிப்பு!


கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கைப்பற்ற சிறந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் 100 மில்லியன் டொலர் பரிசு தொகையை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.


பூமி வெப்பமயமாவதைக் கட்டுப்படுத்த, காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பல திட்டங்களில் கார்பன் உமிழ்வு ஒரு முக்கியமான பகுதியாக மாறி வருகிறது.


ஆனால் அதனைக் கட்டுப்படுத்த இன்றுவரை தொழில்நுட்பத்தில் மிகக் குறைந்த முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. காற்றில் இருந்து கார்பனை வெளியே எடுப்பதை விட உமிழ்வைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.


இந்நிலையில், International Energy Agency கடந்த ஆண்டு, நாடுகள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால் கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தைப் (Carbon Capture Technology) பயன்படுத்துவதில் கூர்மையான உயர்வு தேவை என்று கூறியது.


இந்நிலையில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவரும், உலகின் முதன்மை பணக்காரருமான எலோன் மஸ்க், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைப் பிடிக்கும் சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்குபவருக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை பரிசாக அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.


இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், இது குறித்த விவரங்களை அடுத்த வாரம் வெளியிடுவதாக கூறியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post