
இலங்கை இன்று மிக உயர்ந்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது, அதன்படி 892 புதியதொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மொத்த நோயாளிகள்: 61,586
குணமடைந்தவர்கள்: 54,435
சிகிச்சை பெரும் நோயாளிகள்: 6,854
இதற்கிடையில், நாட்டில் இன்றைய தினம் 07 கொரோனா மரணங்கள் பதிவாகின. இந்நிலையில், மொத்த கொரோனா இறப்புகளை 297 ஆக அதிகரித்துள்ளது.
நிட்டம்புவ, இரத்தினபுரி, எந்தரமுல்லை, கொழும்பு -13, கொழும்பு -06 போன்ற பகுதிகளில் இருந்தே இவ்வாறு மரணங்கள் பதிவாகின.
