மேலுமொரு 03 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

மேலுமொரு 03 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!


மஹியங்கனை பகுதியில் மூன்று வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 04 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளன்.


குறித்த நபர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையினூடாகவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த குடும்பத்தின் இளைஞன் ஒருவன் கடந்த வாரம் கொழும்பிலிருந்து வருகைத்தந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையினூடாக தொற்று உறுதி செய்யப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து தொற்று உறுதிசெய்யப்பட்ட 04 பேரையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், பசறையில் இதுவரை பாடசாலை மாணவர்கள் 18 பேர் உள்ளிட்ட 40 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post