தற்போது 03 வகையாக உருமாறிய கொரோனா வைரஸ்; 14 நாடுகளில் பரவியுள்ளது! ஐ.நா அமைப்பு எச்சரிக்கை!

தற்போது 03 வகையாக உருமாறிய கொரோனா வைரஸ்; 14 நாடுகளில் பரவியுள்ளது! ஐ.நா அமைப்பு எச்சரிக்கை!


14 நாடுகளில் பரவியுள்ள 03 புதிய வகை கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா சபை எச்சரித்துள்ளது.


இது குறித்து ஐ.நா சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில், தற்போது உருமாறிய 03 வகை கொரோனா வைரஸ், 14 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இதில் இங்கிலாந்து நாட்டிலும், தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டவை இரு வகை கொரோனா வைரஸ் என்றும், மூன்றாவது வகை வைரஸ், பிரேசில் நாட்டின் அமேசனோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸை விட  உருமாறிய கொரோனா அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.