இலங்கையில் ஏற்றப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்ன?

இலங்கையில் ஏற்றப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்ன?


இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நேற்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நோயாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கென பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் ஒன்று கொவிஷீல்ட் தடுப்பூசியால் நேரக்கூடிய பக்க விளைவுகள் ஆகும்.


இதன்படி பொதுவான பக்க விளைவுகளாக தொடும் போது வலி, வலி, சிவத்தல், தோலில் அரிப்பு ஆகியவை அடங்கும். ஊசி போடப்பட்ட இடத்தில் வீக்கம், கண்டல் காயம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் களைப்பு, குமட்டல், காய்ச்சல் போன்ற உணர்வுகளும் பொதுவான பக்கவிளைவுகளில் அடங்கும். இலேசான காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தசை வலி ஆகியனவும் பொதுவானவை.


தலை சுற்றல், பசியின்மை, வயிற்று வலி மற்றும் தோலின் மீது செந்நிறப் பொட்டுக்கள் போன்றவை அசாதாரணமான பக்க விளைவுகளாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.