சிங்கப்பூரில் கொரோனா சோதனையை மேற்கொள்ள ஒரு புதிய, துரிதமான கையடக்கக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
Cell ID எனும் உள்ளூர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறித்த அந்தச் சோதனைக் கருவி கூடிய விரைவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படலாம்.
கருவியின் மூலம் 5 நிமிடங்களில் கொரோனா தொற்றுக்கான சோதனை முடிவுகளைப் பெற முடியும்.
கருவி ஏற்கனவே தனிமைப்படுத்தும் இடத்திலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலும் சோதிக்கப்பட்டுள்ளது. அடுத்து, சுகாதார அறிவியல் ஆணையம் அதனைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கவேண்டும்.
மேலும் பரிசோதனைக் கருவி, சிறியதாகவும் எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Biochip எனப்படும் இந்தச் சில்லுக்குள் 10 மைக்ரோலிட்டர் மாதிரியை மட்டும் செலுத்தினால் போதும். பிறகு கருவியை மடிக்கணினியில் செருகி, முடிவுகளைச் சற்று நேரத்தில் தெரிந்துகொள்ளலாம்.
$ads={2}
மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டால், 5 நிமிடங்களில் புலப்படும். கிருமி இல்லை என்பதை 1 மணிநேரத்திற்குள் கண்டறியலாம்.
Quiz PCR Biochip என்று அழைக்கப்படும் அந்தக் கருவி, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கருவிகளைப்போலவே, 97இலிருந்து 100 விழுக்காடு வரை துல்லியமான முடிவுகளைக் கொடுக்கும்.
10இல் 9 கிருமித்தொற்றுச் சம்பவங்களை அதனால் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.