சடுதியாக அதிகரித்து கொரோனா உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

சடுதியாக அதிகரித்து கொரோனா உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!


இன்றைய தினம் (05) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.


சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


$ads={2}


பண்டாரகம பகுதியை சேர்ந்த 02 பேரும், தெமட்டகொட, வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 13 போன்ற பகுதிகளில் இருந்து தலா ஒருவரும், மேலும் இரு சிறைச்சாலை கைதிகளே இவ்வாறு பலியாகியுள்ளனர்.


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.


அத்துடன் இன்று 669 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒக்டோபர் 04ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 27,228 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20,090 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post